விஜய் சேதுபதியின் ‘க/பெ.ரணசிங்கம்’… வெளியானது ‘அழகிய சிறுக்கி’ பாடல் ப்ரோமோ!

  • September 29, 2020 / 09:30 PM IST

‘கொரோனா’ பிரச்சனையால் இப்போது அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இதனால், தயாரிப்பாளர்கள் படங்களை நேரடியாக OTT-யில் ரிலீஸ் செய்து வருகிறார்கள். சமீபத்தில், ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘பெண்குயின்’, யோகி பாபு நடித்துள்ள ‘காக்டெய்ல்’, வரலக்ஷ்மி சரத்குமார் நடித்துள்ள ‘டேனி’, வைபவ் நடித்துள்ள ‘லாக்கப்’ ஆகிய தமிழ் படங்கள் OTT-யில் வெளி வந்தது.

சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படமும் அக்டோபர் 30-ஆம் தேதி ‘அமேசான் ப்ரைம்’-யில் ரிலீஸாக உள்ளது. கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி, முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்துள்ள ‘க/பெ.ரணசிங்கம்’ என்ற படமும் அக்டோபர் 2-ஆம் தேதி OTT-யில் ரிலீஸாகப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது. இந்த படத்தின் டிஜிட்டல் ரைட்ஸை ‘ஜீ ப்ளெக்ஸ்’ கைப்பற்றியிருக்கிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடித்துள்ள இந்த படத்தை இயக்குநர் பி.விருமாண்டி இயக்கியுள்ளாராம். இந்த படத்தை OTT தளமான ‘ஜீ ப்ளெக்ஸ்’-யில் பார்க்க பிரத்யேகமாக ரூ.199 பணம் செலுத்த வேண்டுமாம். தற்போது, இப்படத்தின் ‘அழகிய சிறுக்கி’ என்ற பாடலின் ப்ரோமோ வீடியோவை தயாரிப்பு நிறுவனமான ‘KJR ஸ்டுடியோஸ்’ ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus