விஜய் சேதுபதியின் ‘க/பெ.ரணசிங்கம்’ படத்தின் சூப்பரான தகவலை சொன்ன தயாரிப்பு நிறுவனம்!

‘கொரோனா’ பிரச்சனையால் இப்போது அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இதனால், தயாரிப்பாளர்கள் படங்களை நேரடியாக OTT-யில் ரிலீஸ் செய்து வருகிறார்கள். சமீபத்தில், ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘பெண்குயின்’, யோகி பாபு நடித்துள்ள ‘காக்டெய்ல்’, வரலக்ஷ்மி சரத்குமார் நடித்துள்ள ‘டேனி’, வைபவ் நடித்துள்ள ‘லாக்கப்’ ஆகிய தமிழ் படங்கள் OTT-யில் வெளி வந்தது.

சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படமும் அக்டோபர் 30-ஆம் தேதி ‘அமேசான் ப்ரைம்’-யில் ரிலீஸாக உள்ளது. கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி, முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்துள்ள ‘க/பெ.ரணசிங்கம்’ என்ற படமும் அக்டோபர் 2-ஆம் தேதி OTT-யில் ரிலீஸாகப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது. இந்த படத்தின் டிஜிட்டல் ரைட்ஸை ‘ஜீ ப்ளெக்ஸ்’ கைப்பற்றியிருக்கிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடித்துள்ள இந்த படத்தை இயக்குநர் பி.விருமாண்டி இயக்கியுள்ளாராம். இந்த படத்தை OTT தளமான ‘ஜீ ப்ளெக்ஸ்’-யில் பார்க்க பிரத்யேகமாக ரூ.199 பணம் செலுத்த வேண்டுமாம். தற்போது, இப்படத்தினை பார்த்த சென்சார் குழுவினர் ‘யு’ சர்டிஃபிகேட் அளித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘KJR ஸ்டுடியோஸ்’ ட்விட்டரில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளது.

Share.