விஜய் சேதுபதி ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் இடம்பிடித்த ‘க/பெ.ரணசிங்கம்’ படத்தின் ‘தாரையடி நீ எனக்கு’ பாடல்!

‘கொரோனா’ பிரச்சனையால் இப்போது அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இதனால், தயாரிப்பாளர்கள் படங்களை நேரடியாக OTT-யில் ரிலீஸ் செய்து வருகிறார்கள். சமீபத்தில், ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘பெண்குயின்’, யோகி பாபு நடித்துள்ள ‘காக்டெய்ல்’, வரலக்ஷ்மி சரத்குமார் நடித்துள்ள ‘டேனி’, வைபவ் நடித்துள்ள ‘லாக்கப்’ ஆகிய தமிழ் படங்கள் OTT-யில் வெளி வந்தது.

சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படமும் அக்டோபர் 30-ஆம் தேதி ‘அமேசான் ப்ரைம்’-யில் ரிலீஸாக உள்ளது. கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி, முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்துள்ள ‘க/பெ.ரணசிங்கம்’ என்ற படமும் அக்டோபர் 2-ஆம் தேதி (நாளை) OTT-யில் ரிலீஸாகப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது. இந்த படத்தின் டிஜிட்டல் ரைட்ஸை ‘ஜீ ப்ளெக்ஸ்’ கைப்பற்றியிருக்கிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடித்துள்ள இந்த படத்தை இயக்குநர் பி.விருமாண்டி இயக்கியுள்ளாராம். இந்த படத்தை OTT தளமான ‘ஜீ ப்ளெக்ஸ்’-யில் பார்க்க பிரத்யேகமாக ரூ.199 பணம் செலுத்த வேண்டுமாம். இந்நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘KJR ஸ்டுடியோஸ்’ விஜய் சேதுபதி ரசிகர்களுக்காக இதன் நான்காவது சிங்கிள் ‘தாரையடி நீ எனக்கு’ பாடலை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. இப்பாடல் மக்கள் செல்வன் ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் இடம்பிடித்துள்ளது. இதற்கு பாப்புலரான இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

Share.