சினிமாவில் ஜெயிக்க கடின உழைப்பும், திறமையும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் சாதித்து மாஸ் காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவரது ரசிகர்கள் ‘மக்கள் செல்வன்’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள்.
இப்போது, ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் 12 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. ‘கொரோனா’ லாக் டவுனுக்கு முன்பே விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படமான ‘க/பெ.ரணசிங்கம்’-யின் ஷூட்டிங் முடிந்து விட்டது. இப்படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘KJR ஸ்டுடியோஸ்’ விஜய் சேதுபதி ரசிகர்களுக்காக இதன் சிங்கிள் டிராக்கான ‘அழகிய சிறுக்கி’-யை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. இப்பாடல் மக்கள் செல்வன் ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் இடம்பிடித்துள்ளது. இதற்கு பாப்புலரான இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ‘கவிப்பேரரசு’ வைரமுத்து எழுதியுள்ள இப்பாடலை கோல்ட் தேவராஜ் பாடியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடித்துள்ள இந்த படத்தை இயக்குநர் பி.விருமாண்டி இயக்குகிறாராம்.
The more you watch it, the more you will fall in love with this couple! Here's #AlagiyaSirukki for you from #KaPaeRanasingam.