ஒரு நடிகர் – ஒரு இயக்குநர் கூட்டணி அமைத்து வெளியாகும் ஒரு படம் சூப்பர் ஹிட்டானால், அதே காம்போவில் அடுத்த படம் எப்போது வரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள். அப்படி ஒரு காம்போ தான் நடிகர் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும், இயக்குநர் நலன் குமரசாமியும். இவர்கள் காம்போவில் வெளியான முதல் படம் ‘சூது கவ்வும்’.
2013-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று மெகா ஹிட்டானது. இது ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் கேரியரிலும் மிக முக்கியமான படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து இவர்களது காம்போவில் வெளியான இரண்டாவது படம் ‘காதலும் கடந்து போகும்’ .
இந்த படம் ‘சூது கவ்வும்’ படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களமாக இருந்தது. தற்போது, மக்கள் செல்வனுக்கு, ‘சூது கவ்வும்’ இயக்குநர் சொன்ன ஒரு புதிய கதை மிகவும் பிடித்து விட்டதாம். ஆனால், இதை படமாக எடுப்பதை விட வெப் சீரிஸாக பண்ணலாம் என விஜய் சேதுபதி சொல்லியிருக்கிறாராம்.