‘பிக் பாஸ் 4’-யில் நானா?… வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் சேதுபதி பட நடிகை!

  • October 3, 2020 / 05:21 PM IST

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 நாளை (அக்டோபர் 4-ஆம் தேதி) முதல் ஒளிபரப்பாகத் துவங்கவுள்ளது . சமீபத்தில், விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ‘பிக் பாஸ்’ சீசன் 4-க்கான 10 ப்ரோமோ வீடியோக்களை வெளியிட்டது. நடிகர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் இடம்பெற்றிருக்கும் இந்த 10 ப்ரோமோ வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்த ப்ரோமோ வீடியோக்களில் ‘பிக் பாஸ்’-யின் லோகோ டிசைன் புதிதாக டிசைன் செய்யப்பட்டிருந்தது. இந்த சீசன் 4-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். நடிகை ரேகா, நடிகர் ஜித்தன் ரமேஷ், நடிகர் ஆரி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித், நடிகை கேப்ரில்லா, நடிகை ஷிவானி நாராயணன், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரம்யா பாண்டியன், தொகுப்பாளினி அர்ச்சனா, நடிகர் ரியோ ராஜ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, மாடல் பாலாஜி முருகதாஸ், மாடல் சோமசேகர், பாடகர் வேல்முருகன் ஆகிய 15 பிரபலங்கள் கலந்து கொள்ளப்போவதாக சொல்லப்படுகிறது.

கடந்த சில நாட்களாக ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்ற தமிழ் படம் மூலம் ஃபேமஸான நடிகை காயத்ரி ஷங்கர் ‘பிக் பாஸ் 4’-யில் கலந்து கொள்ளப்போகிறார் என்று தண்டோரா போடப்பட்டது. தற்போது, இது தொடர்பாக காயத்ரி ட்விட்டரில் “இந்த தகவல் உண்மையல்ல. வதந்தியே. நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போவதில்லை” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus