டொராண்டோவில் இந்த ஆண்டிற்கான (2020) சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெறவுள்ளது. இவ்விழா வருகிற ஆகஸ்ட் 9-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இச்சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் திரையிட ‘ஓ மை கடவுளே’ என்ற தமிழ் திரைப்படம் தேர்வாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘ஹேப்பி ஹை பிக்சர்ஸ்’ தங்களது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளது. ‘ஓ மை கடவுளே’ படம் இந்த ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியானது. இதில் கதையின் நாயகனாக அசோக் செல்வன் நடித்திருந்தார். படத்தில் பவர்ஃபுல்லான கடவுள் கதாபாத்திரமாக ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வலம் வந்திருந்தார். ஃபேண்டசி ரொமாண்டிக் காமெடி படமான இதனை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தான் இயக்கியிருந்தார்.
இதில் முக்கிய ரோல்களில் ரித்திகா சிங், வாணி போஜன், ஷாரா, எம்.எஸ்.பாஸ்கர், சந்தோஷ் பிரதாப், கஜராஜ், ரமேஷ் திலக் மற்றும் பலர் நடித்திருந்தனர். இவ்விழாவில் ‘கைதி’ (தமிழ்), ‘ஜெர்சி’ (தெலுங்கு), ‘டிரான்ஸ்’ (மலையாளம்), ‘சூப்பர் 30’ (ஹிந்தி) ஆகிய படங்களும் திரையிட தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Extremely excited for #OhMyKadavule to be selected to be screened at the prestigious International Indian Film Festival Toronto! Wouldn't be possible without your love ❤️@AshokSelvan @dir_Ashwath @ritika_offl @vanibhojanoffl @leon_james @abinaya_selvam @SakthiFilmFctry pic.twitter.com/rHpjmsGQjO
— Happy High Pictures (@HappyHighPic) August 4, 2020