சினிமாவில் ஜெயிக்க கடின உழைப்பும், திறமையும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் சாதித்து மாஸ் காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவரது ரசிகர்கள் ‘மக்கள் செல்வன்’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். திரையுலகில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் என்ட்ரியான விஜய் சேதுபதிக்கு ஆரம்பத்தில் சின்ன ரோல் தான் ‘புதுப்பேட்டை. லீ, நான் மகான் அல்ல’ போன்ற சில படங்களில் கிடைத்தது.
அதன் பிறகு ‘தென்மேற்குப் பருவக்காற்று’ என்ற திரைப்படம் தான் விஜய் சேதுபதியை கதையின் நாயகனாக அவதாரம் எடுக்க வைத்து அழகு பார்த்தது தமிழ் சினிமா. ‘தென்மேற்குப் பருவக்காற்று’ படத்துக்கு பிறகு விஜய் சேதுபதி ஹீரோவாக வலம் வந்த ‘பீட்சா, நடவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும்’ ஆகிய மூன்று படங்களும் தான் வேற லெவலில் ஹிட்டாகி, இந்த மக்கள் செல்வனின் நடிப்புக்கு லைக்ஸ் போட வைத்தது. இதனையடுத்து ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது.
இப்போது, ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் பல படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், விஜய் சேதுபதியின் காதல் திருமணம் எப்படி நடந்தது? என்பது பற்றிய தகவல் கிடைத்துள்ளது. தற்போது, ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என பல சமூக வலைத்தளம் இருப்பதுபோல், அப்போது orkut மற்றும் yahoo messenger மட்டும் தான் இருந்தது. அந்த சமயத்தில் விஜய் சேதுபதிக்கு ஆன்லைன் மூலம் அறிமுகமானவர் தான் ஜெஸ்ஸி. அதன் மூலம் பேசி பழகி இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். பின், 2003-ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். விஜய் சேதுபதி – ஜெஸ்ஸி தம்பதியினருக்கு சூர்யா என்ற மகனும், ஸ்ரீஜா என்ற மகளும் உள்ளனர்.