சினிமாவில் ஜெயிக்க கடின உழைப்பும், திறமையும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் சாதித்து மாஸ் காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவரது ரசிகர்கள் ‘மக்கள் செல்வன்’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். திரையுலகில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் என்ட்ரியான விஜய் சேதுபதிக்கு ஆரம்பத்தில் சின்ன ரோல் தான் ‘புதுப்பேட்டை. லீ, நான் மகான் அல்ல’ போன்ற சில படங்களில் கிடைத்தது.
அதன் பிறகு ‘தென்மேற்குப் பருவக்காற்று’ என்ற திரைப்படம் தான் விஜய் சேதுபதியை கதையின் நாயகனாக அவதாரம் எடுக்க வைத்து அழகு பார்த்தது தமிழ் சினிமா. ‘தென்மேற்குப் பருவக்காற்று’ படத்துக்கு பிறகு விஜய் சேதுபதி ஹீரோவாக வலம் வந்த ‘பீட்சா, நடவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும்’ ஆகிய மூன்று படங்களும் தான் வேற லெவலில் ஹிட்டாகி, இந்த மக்கள் செல்வனின் நடிப்புக்கு லைக்ஸ் போட வைத்தது. இதனையடுத்து ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது, ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் பல படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தில் ‘தளபதி’ விஜய் ஹீரோவாக நடிக்க, டாப் இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் இதனை இயக்கியிருந்தார். இதில் விஜய் சேதுபதி ‘பவானி’ என்ற பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், மகேந்திரன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. தற்போது, நடிகர் விஜய் சேதுபதி ‘மாஸ்டர்’-க்காக ரூ.10 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.