சினிமாவில் ஜெயிக்க கடின உழைப்பும், திறமையும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் சாதித்து மாஸ் காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவரது ரசிகர்கள் ‘மக்கள் செல்வன்’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். திரையுலகில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் என்ட்ரியான விஜய் சேதுபதிக்கு ஆரம்பத்தில் சின்ன ரோல் தான் ‘புதுப்பேட்டை. லீ, நான் மகான் அல்ல’ போன்ற சில படங்களில் கிடைத்தது.
அதன் பிறகு ‘தென்மேற்குப் பருவக்காற்று’ என்ற திரைப்படம் தான் விஜய் சேதுபதியை கதையின் நாயகனாக அவதாரம் எடுக்க வைத்து அழகு பார்த்தது தமிழ் சினிமா. ‘தென்மேற்குப் பருவக்காற்று’ படத்துக்கு பிறகு விஜய் சேதுபதி ஹீரோவாக வலம் வந்த ‘பீட்சா, நடவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும்’ ஆகிய மூன்று படங்களும் தான் வேற லெவலில் ஹிட்டாகி, இந்த மக்கள் செல்வனின் நடிப்புக்கு லைக்ஸ் போட வைத்தது.
இதனையடுத்து ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, பண்ணையாரும் பத்மினியும், ஆரஞ்சு மிட்டாய், நானும் ரௌடி தான், சேதுபதி, காதலும் கடந்து போகும், இறைவி, தர்மதுரை, ஆண்டவன் கட்டளை, கவண், விக்ரம் வேதா, புரியாத புதிர், செக்கச்சிவந்த வானம், 96, சீதக்காதி, பேட்ட, சூப்பர் டீலக்ஸ்’ என படங்கள் குவிந்தது. இப்போது, ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் 15 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், விஜய் சேதுபதி செம ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கும் புதிய போட்டோஷூட் ஸ்டில்ஸ் வெளியாகி ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.