விஜய் சேதுபதி – பார்த்திபன் இணைந்து நடித்துள்ள ‘துக்ளக் தர்பார்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சினிமாவில் ஜெயிக்க கடின உழைப்பும், திறமையும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் சாதித்து மாஸ் காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவரது ரசிகர்கள் ‘மக்கள் செல்வன்’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் பல படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘துக்ளக் தர்பார்’ என்ற படம் நேற்று (செப்டம்பர் 10-ஆம் தேதி) மாலை சன் டிவியில் ஒளிபரப்பானது. இதனைத் தொடர்ந்து இன்று (செப்டம்பர் 11-ஆம் தேதி) ‘நெட்ஃப்ளிக்ஸ்’-யிலும் இந்த படம் ரிலீஸாகியுள்ளது. படத்தில் மிக முக்கிய ரோல்களில் ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், பார்த்திபன், கருணாகரன், ‘பிக் பாஸ் 4’ மூலம் ஃபேமஸான சம்யுக்தா நடித்துள்ளனர்.

இந்த படத்தை அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்க, ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ லலித் குமார் தயாரித்துள்ளார். கோவிந்த் வஸந்தா இசையமைத்துள்ள இதற்கு மனோஜ் பரமஹம்சா – மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்துள்ளனர். இப்போது, இந்த படத்தை சன் டிவியிலும், ‘நெட்ஃப்ளிக்ஸ்’-யிலும் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

 

Share.