3 நாட்களில் விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ செய்த வசூல் இவ்ளோவா?

  • May 24, 2023 / 10:18 AM IST

சினிமாவில் ஜெயிக்க கடின உழைப்பும், திறமையும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் சாதித்து மாஸ் காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவரது ரசிகர்கள் ‘மக்கள் செல்வன்’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள்.

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் பல படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற படம் கடந்த மே 19-ஆம் தேதி ரிலீஸானது.

இந்த படத்தை வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும், முக்கிய ரோல்களில் கனிகா, ரித்விகா, மோகன் ராஜா, விவேக், மகிழ் திருமேனி ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 3 நாட்களில் இந்த படம் உலக அளவில் ரூ.3.35 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus