விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?
May 20, 2023 / 07:38 PM IST
|Follow Us
சினிமாவில் ஜெயிக்க கடின உழைப்பும், திறமையும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் சாதித்து மாஸ் காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவரது ரசிகர்கள் ‘மக்கள் செல்வன்’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள்.
இப்போது ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் பல படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற படம் நேற்று (மே 19-ஆம் தேதி) ரிலீஸானது.
இந்த படத்தை வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும், முக்கிய ரோல்களில் கனிகா, ரித்விகா, மோகன் ராஜா, விவேக், மகிழ் திருமேனி ஆகியோர் நடித்துள்ளனர்.
இதற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். தற்போது, இந்த படத்தின் முதல் நாள் வசூல் ரூ.1.2 கோடி என தகவல் கிடைத்துள்ளது.
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus