ஜூங்கா படத்திற்காக விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா ?

தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் கதைகளில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல நடிகர் என்ற பெயரை எடுத்தவர் நடிகர் விஜய் சேதுபதி . தென்மேற்கு பருவக்காற்று என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார் . அதற்கு முன்பாக பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார் .

தென்மேற்கு பருவக்காற்று படத்திற்கு பிறகு பீட்சா, சூது கவ்வும் , நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும் என்கிற தொடர்ந்த அடுத்து அடுத்து வெற்றி படங்களில் நடித்தார் . தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து நட்சத்திர நடிகர் ஆனார் . அதன் பிறகு ரஜினி , விஜய் போன்ற நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்தார் . மேலும் தெலுங்கு , ஹிந்தி , போன்ற படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார் .

இவர் வில்லனாக நடித்த படம் அனைத்தும் மிக வெற்றி படங்களாக அமைந்தது . சமீபத்தில் இவர் வில்லனாக நடித்த விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி இயக்குனர் ஹச்.வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த இந்நிலையில் படத்தை இயக்குனர் ஹச்.வினோத் இயக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது .

இந்நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் 2018-ஆம் ஆண்டில் வெளியான படம் ஜூங்கா . இந்த படத்தை இயக்குனர் கோகுல் இயக்கி இருந்தார் . இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க விஜய் சேதுபதி 6 கோடி ரூபாய் வாங்கி உள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது .

Share.