விஜய் – ஷாருக்கான் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கப்போகும் ஷங்கர்… இதன் பட்ஜெட் இத்தனை கோடியா?

  • February 9, 2023 / 07:50 PM IST

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஷங்கர். இவர் இயக்கத்தில் ரெடியாகி வரும் புதிய படமான ‘இந்தியன் 2’வில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

‘இந்தியன் 2’ மட்டுமில்லாமல் இயக்குநர் ஷங்கர் தெலுங்கு மொழியில் ஒரு படமும், ஹிந்தி மொழியில் ஒரு படமும் இயக்குகிறார். இதில் தெலுங்கு மொழியில் உருவாகும் படத்தில் ‘மெகா பவர் ஸ்டார்’ ராம் சரண் நடிக்கிறார்.

ஹிந்தி மொழியில் உருவாகவிருக்கும் படத்தில் ரன்வீர் சிங் நடிக்க உள்ளாராம். இந்நிலையில், இயக்குநர் ஷங்கர் இயக்கப்போகும் புதிய படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. சயின்ஸ்-ஃபிக்ஷன் ஜானரில் உருவாகப்போகும் இப்படத்தில் கோலிவுட் சினிமாவின் முன்னணி ஹீரோ ‘தளபதி’ விஜய்யும், பாலிவுட் சினிமாவின் முன்னணி ஹீரோ ஷாருக்கானும் இணைந்து நடிக்கவுள்ளனர்.

இந்த படத்தின் பட்ஜெட் ரூ.900 கோடியாம். இரண்டு முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம். மிக விரைவில் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus