தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் நடிகர் சூர்யா மற்றும் விஜய் . விஜய் மசலா படங்களில் நடித்து மாஸ் ஹீரோவாக உள்ளார் . நடிகர் சூர்யா மற்றும் விஜய் இருவரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள் .சூர்யா வித்தியாசமான படங்களில் நடித்து கிளாஸ் ஹீரோவாக உள்ளார் . இந்த இரண்டு நடிகர்களுக்கு பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் உலக அளவில் உள்ளது . ஆரம்ப காலகட்டத்தில் நடிகர் விஜய் மற்றும் சூர்யா இருவரும் இணைந்து இரண்டு படங்களில் நடித்து இருக்கின்றனர் . அதில் ஒன்று நேருக்கு நேர் மற்றொரு படம் பிரண்ட்ஸ்.
சூர்யா நேருக்கு நேர் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகாமல் இருந்த பொது நடிகர் சூர்யாவை கல்லூரியில் விஜய் எதிர்ச்சியாக சந்தித்து உள்ளார் . அப்போது விஜய் சூர்யாவிடம் இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் வசந்த் இயக்கத்தில் நேருக்கு நேர் என்ற படத்தில் அஜித்துடன் இணைந்து நடிக்க போகிறேன் என்று கூறியுள்ளார் . உடனே அதற்கு சூர்யா அஜித்துடன் நடிக்க போவதாக சொல்கிறாய் நல்லா டிரஸ் பண்ணிக்கோ , முடியை ஸ்டைல் பண்ணிட்டு படப்பிடிப்பிற்கு நன்றாக போ என்று பாச மழை பொழிந்து உள்ளார் .
பின்னாட்களில் அந்த படத்தில் இருந்து அஜித் பாதியில் வெளியேற நடிகர் சூர்யா விஜய்யுடன் இணைந்து நடித்தார் . இதை ஒரு பேட்டியில் தனது முதல் படம் பற்றி பேசும் போது பகிர்ந்து இருந்தார் . இது ஒரு பக்கம் இருக்க நடிகர் விஜய் நேருக்கு நேர் படத்தை ப்ரோமோஷன் செய்யும் போது சூர்யா எனது காலேஜ் நண்பர் அவர் வளர்ந்து வரும் ஹீரோ அவரை நன்றாக ப்ரொமோட் செய்யுங்கள் என்று படத்தின் பி,ஆர்.ஓ நிக்கில் முருகனிடம் கூறி பதிலுக்கு பாச மழை பொழிந்து உள்ளார் .