தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பிகில்’ கடந்த ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட்டானது. இவர் நடித்திருக்கும் புதிய படமான ‘மாஸ்டர்’ ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது.
இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளாராம். இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். ‘கொரோனா’ பிரச்சனையால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இப்பிரச்சனை முடிந்தவுடன் ரிலீஸ் தேதியை ஃபிக்ஸ் செய்து கொள்ளலாம் என காத்துக்கொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
சமீபத்தில், பிரபல நடிகர் மகேஷ் பாபு மரக்கன்று ஒன்றை நட்டு இந்த கிரீன் இந்தியா சேலஞ்சில் விஜய்யையும் பங்கேற்க சொல்லியிருந்தார். தற்போது, இந்த சேலஞ்சை ஏற்றுக் கொண்டு விஜய் தன் வீட்டில் மரக்கன்று ஒன்றை நட்டு, அதன் ஸ்டில்ஸை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த மகேஷ் பாபு, விஜய்-க்கு நன்றி தெரிவித்துள்ளார்.
1
2
3
4
Thanks a lot brother for taking this up👍 Stay safe! 🤗🤗
— Mahesh Babu (@urstrulyMahesh) August 11, 2020