தளபதியுடன் முதல்முறையாக இணையும் இசையமைப்பாளர் தமன்…!

  • May 5, 2020 / 11:17 AM IST

நாடு முழுவதும் கொரோனா நோய் காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்டர் படம் ரிலீசுக்கு தயாராகியிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் வெளியாகாமல் இருக்கிறது. மாஸ்டர் படம் முழுமையடைந்ததை தொடர்ந்து, விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Vijay Teams Up with Music Director Thaman For first Time1

‘தளபதி 65’ என தற்காலிகமாக அழைக்கப்படும் இ்நத படத்தின் இசையமைப்பாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது அது வேறு யாரும் இல்லை பிரபல இசையமைப்பாளர் தமன் தான் அது.

இசையமைப்பாளர் தமன் இசையமைப்பில் அல்லு அர்ஜூனின் அல வைக்குந்தபுரம்லோ பட பாடல்கள் சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக இந்த படத்தில் இடம் பெற்ற புட்டபும்மா என்ற பாடல் யூடியூபில் மாஸ் ஹிட் குடுத்தது .

இதனையடுத்து விஜய்யுடன் தமன் இணைந்துள்ளதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு இப்பொழுது அதிகரிக்க தொடங்கியுள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus