‘பிக் பாஸ் 4’-ஓட போட்டியாளர்கள் யாருன்னு தெரிஞ்சுக்கிற நேரம் வந்தாச்சு … புதிய ப்ரோமோவை ஷேரிட்ட விஜய் டிவி!

  • September 28, 2020 / 07:00 PM IST

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 வருகிற அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கவுள்ளது . சமீபத்தில், விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ‘பிக் பாஸ்’ சீசன் 4-க்கான நான்கு ப்ரோமோ வீடியோக்களை வெளியிட்டது.

நடிகர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் இடம்பெற்றிருக்கும் இந்த நான்கு ப்ரோமோ வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த ப்ரோமோ வீடியோக்களில் ‘பிக் பாஸ்’-யின் லோகோ டிசைன் புதிதாக டிசைன் செய்யப்பட்டிருந்தது. இந்த சீசன் 4-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். தினமும் பல பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட்ட வண்ணமுள்ளது கோலிவுட் வட்டாரம்.

இந்நிலையில், விஜய் டிவி தங்களது ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் பிக் பாஸின் குரலில் “இது பிக் பாஸ்.. எப்படி இருக்கீங்க?.. இந்த பிக் பாஸ் சீசன் 4-ஓட போட்டியாளர்கள் யாருன்னு தெரிஞ்சுக்கிற நேரம் வந்தாச்சு” என்ற ஆடியோ இடம்பெற்றிருந்தது. வெகு விரைவில் இந்த சீசன் 4-யில் கலந்து கொள்ளப்போகும் அந்த பிரபலங்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus