Ghilli : ரீ-ரிலீஸாகும் விஜய் – த்ரிஷா ஜோடியாக நடித்த ‘கில்லி’… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

  • February 12, 2024 / 12:45 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘லியோ’ கடந்த ஆண்டு (2023) அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீஸானது. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’-ஐ (The Greatest of all Time) பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபு இயக்குகிறார். இதில் விஜய் டபுள் ஆக்ஷனில் வலம் வரப்போகிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

‘தளபதி’ விஜய்யின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘கில்லி’. இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான தரணி இதனை இயக்கியிருந்தார்.

இதில் வில்லனாக வலம் வந்த பிரகாஷ் ராஜுக்கும் அதிக ஸ்கோப் இருந்தது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று மிகப் பெரிய ஹிட்டானது. தற்போது, இந்த படத்தை வருகிற ஏப்ரல் மாதம் ரீ-ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus