‘பிக் பாஸ்’ சீசன் 4… கலந்து கொள்ளப்போகும் 14 போட்டியாளர்களின் ஃபைனல் லிஸ்ட்!

  • September 29, 2020 / 12:17 PM IST

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 வருகிற அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கவுள்ளது . சமீபத்தில், விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ‘பிக் பாஸ்’ சீசன் 4-க்கான ஐந்து ப்ரோமோ வீடியோக்களை வெளியிட்டது.

நடிகர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் இடம்பெற்றிருக்கும் இந்த ஐந்து ப்ரோமோ வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த ப்ரோமோ வீடியோக்களில் ‘பிக் பாஸ்’-யின் லோகோ டிசைன் புதிதாக டிசைன் செய்யப்பட்டிருந்தது. இந்த சீசன் 4-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

தினமும் பல பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட்ட வண்ணமுள்ளது கோலிவுட் வட்டாரம். இந்நிலையில், ‘பிக் பாஸ் 4’-யில் கலந்து கொள்ளப்போகும் 14 பிரபலங்களின் ஃபைனல் லிஸ்ட் வெளியாகி உள்ளது.

1.நடிகை ரேகா

2.பாடகர் அஜீஸ்

3.நடிகர் ஜித்தன் ரமேஷ்

4.நடிகர் ஆரி

5.’சூப்பர் சிங்கர்’ ஆஜித்

6.நடிகை கேப்ரில்லா

7.நடிகை ஷிவானி நாராயணன்

8.நடிகை சனம் ஷெட்டி

9.நடிகை ரம்யா பாண்டியன்

10.தொகுப்பாளினி அர்ச்சனா

11.நடிகர் ரியோ ராஜ்

12.செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்

13.விஜய் டிவி அறந்தாங்கி நிஷா

14.மாடல் பாலாஜி முருகதாஸ்

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus