பாப்புலர் தொகுப்பாளினிகளில் ஒருவராக வலம் வருபவர் திவ்யதர்ஷினி. டிடி என்று செல்லமாக அழைக்கப்படும் இவரின் பேச்சுக்கு மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. திவ்யதர்ஷினி தொகுப்பாளினியாக மட்டுமில்லாமல் ‘சர்வம் தாள மயம், ப.பாண்டி’ ஆகிய தமிழ் படங்களில் நடிகையாக வலம் வந்திருந்தார்.
2014-ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் டிடி. பின், ஸ்ரீகாந்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2017-ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக டிடி விவாகரத்து பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இப்போது பாப்புலர் நடிகர்களில் ஒருவரான ஜீவாவின் புதிய படத்தில் மிக முக்கிய ரோலில் திவ்யதர்ஷினி நடித்துள்ளார். ‘காபி வித் காதல்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை பிரபல இயக்குநர் சுந்தர்.சி இயக்கியுள்ளார்.
இதில் ஸ்ரீகாந்த், மாளவிகா ஷர்மா, ஜெய், அம்ரிதா, ஐஸ்வர்யா தத்தா மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தை வருகிற அக்டோபர் 7-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், திவ்யதர்ஷினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புது போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.