நாளை முதல் ஆரம்பமாகும் ‘BB ஜோடிகள்’… வெளியானது புதிய ப்ரோமோ!

  • May 1, 2021 / 07:35 PM IST

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 18 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி டைட்டில் வின்னர் என்றும், பாலாஜி முருகதாஸ் ரன்னர்-அப் என்றும் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் அறிவித்தார். அடுத்ததாக ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5-க்கான முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டிருக்கிறதாம். இதன் ஷூட்டிங்கை இந்த ஆண்டு (2021) ஜூன் மாதம் 25-ஆம் தேதி முதல் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த சீசன் 5-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

இந்நிலையில், விஜய் டிவியில் ‘பிக் பாஸ்’யின் அனைத்து சீசன்களிலும் வந்த பிரபலங்கள் சிலர் ‘பிக் பாஸ் ஜோடிகள்’ என்ற புதிய ஷோவில் கலந்து கொள்ளவிருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதற்கான இரண்டு ப்ரோமோ வீடியோக்களும் வெளியாகி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது. இந்நிகழ்ச்சி நாளை (மே 2-ஆம் தேதி) முதல் ஞாயிறுதோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளதாம். இந்த ஷோவில் பாப்புலர் நடிகர் நகுலும், பாப்புலர் நடிகை ரம்யா கிருஷ்ணனும் தான் நடுவர்களாம். தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புது ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.

1

2

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus