‘பிக் பாஸ் 4’-னால விஜய் டிவியின் அட்மினுக்கு வந்த சோதனை… வைரலாகும் வாட்ஸ் அப் சாட்!

  • September 17, 2020 / 01:10 PM IST

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4-க்கான ஷூட்டிங் வெகு விரைவில் துவங்கவுள்ளது. சமீபத்தில், விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ‘பிக் பாஸ்’ சீசன் 4-க்கான இரண்டு ப்ரோமோ வீடியோக்களை வெளியிட்டது. நடிகர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் இடம்பெற்றிருக்கும் இந்த இரண்டு ப்ரோமோ வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்த ப்ரோமோ வீடியோக்களில் ‘பிக் பாஸ்’-யின் லோகோ டிசைன் புதிதாக டிசைன் செய்யப்பட்டிருந்தது. இந்த சீசன் 4-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். தினமும் பல பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட்ட வண்ணமுள்ளது கோலிவுட் வட்டாரம். தற்போது, விஜய் டிவி தங்களது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர் விஜய் டிவியின் அட்மினுக்கு வாட்ஸ் அப்பில் சாட் பண்ணது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

இந்த வாட்ஸ் அப் சாட்டிங் புகைப்படத்தில் ரசிகர் : டேய், விஜய் டிவியின் அட்மின் : சொல்லு டா, ரசிகர் : பிக் பாஸ்-யில் கலந்து கொள்ளப்போகும் போட்டியாளர்கள் யாரு?, விஜய் டிவியின் அட்மின் : சத்தியமா தெரியலடா, ரசிகர் : நீ நெஜமாவே விஜய் டிவில தான் வேலை பாக்குறியா?, அதற்கு விஜய் டிவியின் அட்மின் என்ன சொல்வது என்று தெரியாமல் வாயை மூடிய படி ஒரு எமோஜியை அனுப்பியிருக்கிறார். இந்நிகழ்ச்சி வருகிற அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கும் என்று சொல்லப்படுகிறது. வெகு விரைவில் இந்த சீசன் 4-யில் கலந்து கொள்ளப்போகும் அந்த பிரபலங்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus