தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘வாரிசு’-வை வம்சி இயக்கியிருந்தார். இந்த ஆண்டு (2023) ஜனவரி 11-ஆம் தேதி இப்படம் ரிலீஸானது.
‘வாரிசு’-வை தொடர்ந்து விஜய்-யின் 67-வது படமான ‘லியோ’வை ‘மாஸ்டர்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தை ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ லலித் குமார் தயாரிக்கிறார். படம் வருகிற அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
இதனைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இதில் விஜய் டபுள் ஆக்ஷனில் வலம் வரப்போகிறார், ஜோதிகா, பிரியங்கா மோகன் என 2 ஹீரோயின்ஸ் நடிக்கவிருக்கிறார்கள்.
மேலும், மிக முக்கிய ரோல்களில் ஜெய், பிரபு தேவா, மாதவன் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இதன் ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடக்கிறதாம். தற்போது, விஜய்யின் லுக்கிற்காக 3D VFX ஸ்கேன் செய்ய அவர் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு லாஸ் ஏஞ்சல்ஸில் USC Institute for Creative Technologies ஸ்டுடியோவுக்கு சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
Welcome to the future!!! #Thalapathy68 @actorvijay @archanakalpathi pic.twitter.com/snWrqMEjfU
— venkat prabhu (@vp_offl) August 31, 2023