மறைந்த நடிகர் விவேக்கின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்ன ‘தளபதி’ விஜய்!

  • April 26, 2021 / 02:49 PM IST

‘காமெடி’ என்று சொன்னாலே விவேக்கின் பெயர் தான் டக்கென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவரின் காமெடி காட்சிகள் நம் மனதில் பதிந்து விட்டது. நமது வாழ்க்கையிலும், படங்களில் விவேக் பேசிய பல வசனங்களை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தினமும் நம்மை அறியாமல் பேசிக் கொண்டே தான் இருக்கிறோம்.

கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி நடிகர் விவேக் ‘கொரோனா’ தடுப்பூசி போட்டுக் கொண்டார். பின், கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி நடிகர் விவேக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் ICU-வில் அனுமதிக்கப்பட்ட விவேக்கிற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தார்கள். ஆனால், ஏப்ரல் 17-ஆம் தேதி காலை சிகிச்சை பலனின்றி விவேக் இயற்கை எய்தினார்.

இந்நிலையில், இன்று டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய் சென்னையில் உள்ள நடிகர் விவேக்கின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்னதாக தகவல் கிடைத்துள்ளது. விவேக் இறந்த சமயத்தில் விஜய் ஜார்ஜியாவில் இயக்குநர் நெல்சன் படத்தின் ஷூட்டிங்கில் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus