நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படமான தளபதி 66 படத்தின் பூஜை சென்னையில் சில மாதங்களுக்கு முன்னர் நடந்தது . அதன் பிறகு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் சில நாட்கள் நடந்தது . அதன் பிறகு படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது.
இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார் . தோழா படத்தை இயக்கிய இயக்குனர் வம்சி இந்த படத்தை இயக்கி வருகிறார் . மேலும் இந்த படத்தில் நடிகர்கள் சரத்குமார் , பிரகாஷ் ராஜ் , பிரபு , நடிகை ஜெயசுதா , நடிகை சங்கீதா மற்றும் பிக் பாஸ் புகழ் சம்யுக்தா ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியானது . முழுக்க முழுக்க குடும்ப படமாக இந்த படம் உருவாக இருக்கிறது . இந்த படத்திற்கு வாரிசு என்று தலைப்பு வைத்துள்ளனர் .இந்நிலையில் வாரிசு படத்தின் ஐந்தாவது கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டிணத்தில் நடந்து முடிந்தது .
இந்நிலையில் இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள எண்ணூர் என்கிற இடத்தில் நடந்து வருகிறது . படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய்யை சந்திக்க நிறைய ரசிகர்கள் சென்று இருந்தனர் ஆனால் நடிகர் விஜய் அவர்களை சந்திக்கவில்லை என்று ரசிகர்கள் தங்களது ஆதகங்களை தெரிவித்து இருந்தனர் . ரஜினி மற்றும் சூர்யா வந்த போது ரசிகர்களை சந்தித்து கை அசைத்தார்கள் ஆனால் விஜய் மட்டும் எங்களை பார்க்காமல் இருப்பது ஏன் என்று அவர்கள் கொந்தளித்து இருந்தனர் .இதனால் சமூக வலைத்தளங்களில் விஜய்க்கு எதிராக கருத்துகள் வெளியாகி இருந்தது .
இந்நிலையில் மறுநாள் மீண்டும் நடிகர் விஜய்யை சந்திக்க ரசிகர்கள் கூடினார்கள் இந்த முறை நடிகர் விஜய் ரசிகர்களை சந்தித்து உள்ளார் . விஜய் இந்த முறை ரசிகர்களை சந்தித்தற்கு காரணம் முதல் நாள் விஜய் ரசிகர்கள் விஜய்க்கு எதிராகவே கொந்தளித்து வீடியோ போட்டது அது விவாதங்களை எழுப்பியது தான் காரணம் என்று பொதுவான மக்களின் கருத்தாக உள்ளது .
விஜய் ரசிகர்களை முதல் நாள் பார்க்க மறுத்ததற்கு உண்மையான காரணம் என்ன என்பதை விஜய் மட்டுமே அறிவார் .