தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரை வலம் வருகிறவர் தான் நடிகர் விஜய் .மாஸ்டர் படத்திற்கு பிறகு இவர் நடித்த பீஸ்ட் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 13ம் தேதி வெளியாக இருக்கிறது .இதனை தொடர்ந்து நடிகர் விஜய், இயக்குனர் வம்ஷி இயக்கத்தில் தனது அடுத்த படத்தில் நடிக்கிறார் விஜய்.
நடிகர் விஜய் சினிமாவை தாண்டி அரசியலிலும் ஆர்வம் உடையவர் . சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பலர் போட்டியிட்டு அதில் சிலர் வெற்றியும் பெற்றனர்.
மேலும் விஜய் ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் அடிக்கடி ட்விட்டரில் சண்டை போடுவதை வழக்கமாக வைத்துள்ளனர் . மேலும் அரசியில் தலைவர்களையும் விஜய் ரசிகர்கள் கலாய்த்து மீம்ஸ் போடுவதாக செய்திகள் வெளியாகின்றன.
மேலும் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் முக்கிய பொறுப்பாளராய் இருப்பவர் தான் புஸ்ஸி ஆனந்த். இவரால் தான் நடிகர் விஜய்யுக்கும் அவரது தந்தைக்கு பிரச்சனை ஏற்பட்டது என கூறப்படுகிறது . இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அரசு பதவிகளில் உள்ளோர்களை , அரசியில் கட்சி தலைவர்களை மற்றும் யாரையும் எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில் , பத்திரிகைகளில் ,இணையதளங்களில் ,போஸ்டர்களில் என எந்த தளத்திலும் எழுதுவதோ , பதிவிடுவோ , மீம்ஸ் உள்ளிட்ட எதனையும் இயக்கத்தினர் வெளியிடக்கூடாது. இது நம் தளபதி விஜய் அவர்களின் , கடுமையான உத்தரவின் பேரில் , ஏற்கனவே பலமுறை இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு அறிவுறுத்தி இருந்தோம் . அதனை மீறுவோர் மீது , நடவடிக்கைகள் மேற்கொண்டதோட , இயக்கத்தை விட்டு நீக்கியும் உள்ளோம்.
இருப்பினும் , நம் தளபதி விஜய் அவர்களின் அறிவுறுத்தலை , மீண்டும் யாரேனும் மீறினால் , இனி அவர்களை இயக்கத்தை விட்டு நீக்குவதோடு , அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை தளபதி விஜய் அவர்களின் உத்தரவின் பேரில் , இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு தெரியப்படுத்திக்கொள்கிறேன்
என்று தெரிவித்துள்ளார்.