தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘வாரிசு’-வை வம்சி இயக்கியிருந்தார். இந்த ஆண்டு (2023) ஜனவரி 11-ஆம் தேதி இப்படம் ரிலீஸானது.
‘வாரிசு’-வை தொடர்ந்து விஜய்-யின் 67-வது படமான ‘லியோ’வை ‘மாஸ்டர்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தை ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ லலித் குமார் தயாரிக்கிறார். படம் வருகிற அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
இதனைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இதில் விஜய் டபுள் ஆக்ஷனில் வலம் வரப்போகிறார், ஜோதிகா, பிரியங்கா மோகன் என 2 ஹீரோயின்ஸ் நடிக்கவிருக்கிறார்கள்.
இதன் ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடக்கிறதாம். தற்போது, விஜய் நேற்று வெளியான ஹாலிவுட் படமான டென்சல் வாஷிங்டனின் ‘THE EQUALIZER 3’ FDFS-வை பார்த்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதுடன், தியேட்டரில் எடுத்த விஜய்யின் ஸ்டில்லையும் ஷேர் செய்துள்ளார்.
For the first ever time!!! I captured our #Thalapathy @actorvijay na’s fan boy moment!!! #denzelwashington #Equalizer3 #fdfs #LA #Thalapathy68 @archanakalpathi pic.twitter.com/lbZhamkEXM
— venkat prabhu (@vp_offl) September 2, 2023