தமிழில் முன்னணி நடிகர்கள் என்றால் அதில் தல அஜித் மற்றும் தளபதி விஜய் நீக்க முடியாதவர்கள். இவர்கள் இருவரும் ஏதாவது நிகழ்ச்சியிலோ அல்லது பொது இடங்களிலோ ஒன்றாக சேர்ந்தால் அந்த செய்தி காட்டுத் தீயாய் பரவும்.
அப்படி பரவிய செய்தி ஒன்றுதான் “மங்காத்தா” படப்பிடிப்பின்போது நடிகர் அஜித்தை விஜய் நேரில் சென்று பார்த்துவிட்டு வந்தது. அப்பொழுது விஜய், அஜித் மற்றும் அந்த படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு ஆகிய மூவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வந்தது.
இதைத்தொடர்ந்து நடிகர் அஜித் விஜய் குடும்பத்திற்கு சமைத்து விருந்து வைத்ததும், அப்போது விஜய் விலை உயர்ந்த கடிகாரம் ஒன்றை அஜித்திற்கு பரிசளித்ததும் அனைவருக்கும் தெரிந்த விஷயமே.
என்னதான் தொழில் ரீதியாக இருவருக்குள் போட்டி நிகழ்ந்தாலும், இவர்கள் தங்களுக்குள்ளான நட்பை அவரது ரசிகர்களிடம் காட்டித்தான் வருகிறார்கள்.
தற்போது சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் மங்காத்தா படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு விஜய்யின் விருப்பம் பற்றிய ஒரு சுவாரசிய தகவலை வெளியிட்டுள்ளார்.
மங்காத்தா படத்தை பார்த்த விஜய், தன்னை பாராட்டுவதற்காக விருந்து ஒன்றை அவரது வீட்டில் கொடுத்தார் என்றும், அப்பொழுது தனது இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
வெங்கட் பிரபு” மங்காத்தா படத்தை பார்த்துவிட்டு விஜய் எனக்கு பெரிய ட்ரீட் கொடுத்தார். பின்பு பல விஷயங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தோம். இப்பொழுது ஸ்கிரிப்ட் ரெடி என்றாலும் கதை கேட்க தயாராக இருக்கிறேன் என்று கூறினார். அவருடன் சேர்ந்து கூடிய விரைவில் ஒரு புதிய படத்தை தருவேன் என்று நம்புகிறேன்” என்றிருக்கிறார்.
வெங்கட்பிரபு ஏற்கனவே விஜய்யுடனும் அஜித்துடனும் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அதில் அஜித்தை வைத்து படம் ஏற்கனவே இயக்கிய நிலையில், விஜய் நடிப்பில் விரைவில் இயக்கவுள்ளார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது.