‘வாரிசு’ பட நடிகரின் மகளை கையில் வைத்திருக்கும் ‘தளபதி’ விஜய்… வைரலாகும் கியூட் ஸ்டில்ஸ்!

  • January 14, 2023 / 08:07 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘தளபதி’ விஜய். இவர் நடிப்பில் ‘வாரிசு’ மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘வாரிசு’ படம் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸானது.

இதனை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தில் ராஜு தயாரித்துள்ளார். இப்படத்தை ‘தோழா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் வம்சி இயக்கியுள்ளார். இதில் விஜய்-க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் சரத்குமார், பிரபு, எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, சங்கீதா, யோகி பாபு, ஸ்ரீகாந்த், ஷாம், சம்யுக்தா, கணேஷ் வெங்கட்ராம் ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு தமன் இசையமைத்துள்ளார்.

தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தில் நடித்த நடிகர் கணேஷ் வெங்கட்ராம் இன்ஸ்டாகிராமில் தனது மனைவியும், மகளும் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Read Today's Latest Gallery Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus