ரஜினியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ண விஜயகாந்த்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

  • March 23, 2022 / 01:24 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் ‘புரட்சிக்கலைஞர்’ விஜயகாந்த். 1979-ஆம் ஆண்டு வெளியான படம் ‘இனிக்கும் இளமை’. இது தான் விஜயகாந்த் அறிமுகமான முதல் படமாம். ஆனால், இதில் இவர் வில்லன் ரோலில் நடித்திருந்தார். அதன் பிறகு ‘அகல் விளக்கு’ என்ற படத்தில் தான் விஜயகாந்த் கதையின் நாயகனாக அவதாரம் எடுத்தார்.

அடுத்ததாக 1981-ஆம் ஆண்டு வெளியான ‘சட்டம் ஒரு இருட்டறை’ திரைப்படம் விஜயகாந்திற்கு மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன் பிறகு இவருக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்ததடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. விஜயகாந்தின் 100-வது படமான ‘கேப்டன் பிரபாகரன்’ 1991-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை ஆர்.கே.செல்வமணி இயக்கியிருந்தார்.

அதன் பிறகு ‘உளவுத்துறை’ 125-வது படமாகவும், ‘அரசாங்கம்’ 150-வது படமாகவும் விஜயகாந்திற்கு அமைந்தது. ‘அரசாங்கம்’ படத்துக்கு பிறகு ‘மரியாதை, எங்கள் ஆசான், விருதகிரி’ ஆகிய படங்களில் நடித்தார். இந்நிலையில், விஜயகாந்த் நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு சூப்பர் ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

1980-யில் ரிலீஸான தமிழ் படம் ‘முரட்டுக் காளை’. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான எஸ்.பி.முத்துராமன் இயக்கியிருந்தார். இதில் வில்லன் ரோலில் ஜெய்சங்கர் நடித்திருந்தார். ஆனால், அந்த ரோலில் நடிக்க வைக்க வேண்டுமென இயக்குநர் எஸ்.பி.முத்துராமனின் முதல் சாய்ஸாக இருந்தது விஜயகாந்த் தானாம். பின், சில காரணங்களால் விஜயகாந்தால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus