“முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும்”… தேமுதிக தலைவர் விஜயகாந்த் ட்வீட்!

  • May 5, 2021 / 07:30 PM IST

கொரோனா நோயின் இரண்டாவது அலை தாக்கம் இப்போது அதிகமாக இருப்பதால், மக்கள் பொருளாதாரம் இழந்து, உற்றார் உறவினர் உயிர் இழந்து, நோய் பற்றிய பீதியிலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்து இருக்கின்றனர். இந்நிலையில், இது தொடர்பாக பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார்.

அந்த பதிவில் “நாளுக்கு நாள் பெருகி வரும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும். நாளுக்கு நாள் பெருகி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள் இல்லை என்று வெளியாகும் செய்தி வேதனையளிக்கிறது.

கொரோனாவிற்கு போதிய சிகிச்சையின்றி நாள்தோறும் பல உயிர்கள் பலியாகி வருவது அதிர்ச்சியளிக்கிறது. இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, ஆங்காங்கே முகாம்கள் அமைத்து, 18 வயதிலிருந்து அனைவருக்குமே தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus