சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர் சித்திக். இவர் பிரபல நடிகர் லாலுடன் இணைந்து இயக்கிய முதல் மலையாள படம் ‘ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்’. இப்படத்துக்கு பிறகு முன்னணி ஹீரோக்களை வைத்து சில மலையாள படங்களை இயக்கினார்.
சித்திக் தமிழில் விஜய்யின் ‘ப்ரண்ட்ஸ், காவலன்’, விஜயகாந்தின் ‘எங்கள் அண்ணா’, பிரசன்னாவின் ‘சாது மிரண்டா’, அரவிந்த் சாமியின் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ ஆகிய படங்களை இயக்கினார். இவர் மலையாளம் மற்றும் தமிழ் மொழிகள் மட்டுமின்றி ஹிந்தி மொழியில் ஒரு படமும், தெலுங்கு மொழியில் ஒரு படமும் இயக்கியிருக்கிறார்.
கடைசியாக இயக்குநர் சித்திக் இயக்கிய மலையாள படமான ‘பிக் பிரதர்’ 2020-ஆம் ஆண்டு வெளியானது. இந்நிலையில், நேற்று இயக்குநர் சித்திக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார். தற்போது, நடிகர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் “பிரபல திரைப்பட இயக்குநர் சித்திக் அவர்கள், கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மாரடைப்பு காரணமாக காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.
நான் நடித்த ‘எங்கள் அண்ணா’ திரைப்படத்தில், இயக்குனர் சித்திக் அவர்களுடன் பணியாற்றிய இனிமையான தருணங்களை நினைவுகூர்கிறேன். அவரது இழப்பு திரைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
பிரபல திரைப்பட இயக்குநர் சித்திக் அவர்கள், கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மாரடைப்பு காரணமாக காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.
நான் நடித்த 'எங்கள் அண்ணா' திரைப்படத்தில் , இயக்குனர் சித்திக் அவர்களுடன், (1-2) #DirectorSiddique pic.twitter.com/8M8nARqjpR— Vijayakant (@iVijayakant) August 9, 2023
– பணியாற்றிய இனிமையான தருணங்களை நினைவுகூர்கிறேன். அவரது இழப்பு திரைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன். (2-2) #DirectorSiddique pic.twitter.com/WCVIXgtkG7— Vijayakant (@iVijayakant) August 9, 2023