தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் ‘புரட்சிக்கலைஞர்’ விஜயகாந்த். 1979-ஆம் ஆண்டு வெளியான படம் ‘இனிக்கும் இளமை’. இது தான் விஜயகாந்த் அறிமுகமான முதல் படமாம். ஆனால், இதில் இவர் வில்லன் ரோலில் நடித்திருந்தார். அதன் பிறகு ‘அகல் விளக்கு’ என்ற படத்தில் தான் விஜயகாந்த் கதையின் நாயகனாக அவதாரம் எடுத்தார்.
அடுத்ததாக 1981-ஆம் ஆண்டு வெளியான ‘சட்டம் ஒரு இருட்டறை’ திரைப்படம் விஜயகாந்திற்கு மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன் பிறகு இவருக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்ததடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. விஜயகாந்தின் 100-வது படமான ‘கேப்டன் பிரபாகரன்’ 1991-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை ஆர்.கே.செல்வமணி இயக்கியிருந்தார்.
அதன் பிறகு ‘உளவுத்துறை’ 125-வது படமாகவும், ‘அரசாங்கம்’ 150-வது படமாகவும் விஜயகாந்திற்கு அமைந்தது. ‘அரசாங்கம்’ படத்துக்கு பிறகு ‘மரியாதை, எங்கள் ஆசான், விருதகிரி’ ஆகிய படங்களில் நடித்தார். இப்போது விஜயகாந்த், விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் மிக முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
விஜயகாந்தின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘ரமணா’. இந்த படத்தை பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். இதில் முக்கிய ரோல்களில் சிம்ரன், அஷிமா பல்லா, விஜயன், யூகி சேது, ரியாஸ் கான், ரவிச்சந்திரன் மற்றும் பலர் நடித்திருந்தனர். மிகப் பெரிய ஹிட்டான இப்படம் உலக அளவில் ரூ.34 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.