தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பிகில்’ கடந்த ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட்டானது. இவர் நடித்திருக்கும் புதிய படமான ‘மாஸ்டர்’ ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளாராம். இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.
தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். ‘கொரோனா’ பிரச்சனையால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இப்பிரச்சனை முடிந்தவுடன் ரிலீஸ் தேதியை ஃபிக்ஸ் செய்து கொள்ளலாம் என காத்துக் கொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 65’யை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்க உள்ளது. கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அறிவிப்பு வராததால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். தற்போது, இதற்கான காரணம் கசிந்துள்ளது. சமீபத்தில், விஜய்யை சந்தித்து முழு கதையையும் முருகதாஸ் சொல்லியிருக்கிறார். இக்கதையில் விஜய்-க்கு முதல் பாதி மட்டுமே மிகவும் பிடித்திருந்ததாம். இதன் இரண்டாம் பாதியில் சில கரெக்ஷன்ஸ் பண்ணி மீண்டும் சொல்லுங்க என்று முருகதாஸிடம் விஜய் சொல்லி விட்டாராம். இரண்டாம் பாதியை ரீ-வொர்க் பண்ணி முருகதாஸ் விஜய்யிடம் சொல்லி, அவரும் கிரீன் சிக்னல் கொடுத்த பிறகே படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமாம்.