விஜய் – பூமிகா நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘பத்ரி’… இப்படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

  • June 23, 2022 / 08:07 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். இப்போது விஜய் நடிப்பில் ‘வாரிசு’ மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘வாரிசு’ படத்தை ‘தோழா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் வம்சி இயக்குகிறார்.

இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தை அடுத்த ஆண்டு (2023) பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் படம் விஜய்யின் கேரியரில் 67-வது படமாம். இதற்கான பூஜையை வருகிற அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி போட திட்டமிட்டுள்ளனர்.

‘தளபதி’ விஜய்யின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘பத்ரி’. இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக பூமிகா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பி.ஏ.அருண் பிரசாத் இதனை இயக்கியிருந்தார். சூப்பர் ஹிட்டான இப்படம் உலக அளவில் ரூ.12.15 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus