அடேங்கப்பா… 28 நாட்களில் விஜய்யின் ‘பீஸ்ட்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

  • May 11, 2022 / 02:42 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ மற்றும் இயக்குநர் வம்சி படம் என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் ரிலீஸானது.

இந்த படத்தை ‘கோலமாவு கோகிலா, டாக்டர்’ புகழ் இயக்குநர் நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைத்துள்ளார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இதில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

மேலும், முக்கிய ரோல்களில் இயக்குநர் செல்வராகவன், VTV கணேஷ், அபர்ணா தாஸ், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ஷைன் டாம் சாக்கோ மற்றும் பலர் நடித்துள்ளார்கள். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 28 நாட்களில் இந்த படம் உலக அளவில் ரூ.252.6 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.