விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தின் மாஸான சண்டைக் காட்சி… பக்கா ப்ளான் போட்ட நெல்சன்!

  • August 3, 2021 / 09:52 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘மாஸ்டர்’ கடந்த ஜனவரி மாதம் 13-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்திலும், கடந்த ஜனவரி மாதம் 14-ஆம் தேதி ஹிந்தியிலும் (விஜய் தி மாஸ்டர்) ரிலீஸானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். விஜய்யின் அடுத்த படமான ‘பீஸ்ட்’-ஐ நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைத்து வருகிறார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து வருகிறார். இதில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

கடந்த ஜூன் 21-ஆம் தேதி விஜய்யின் பர்த்டே ஸ்பெஷலாக இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்ஸ் ரிலீஸ் செய்யப்பட்டது. இப்போஸ்டர்ஸ் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. சமீபத்தில், இந்த படத்தின் செகண்ட் ஷெடியூல் ஷூட்டிங் முடிவடைந்தது. தற்போது, 3-வது ஷெடியூல் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வருகிற செப்டம்பர் மாதம் 4-வது ஷெடியூல் ஷூட்டிங்கிற்காக படக்குழுவினர் ரஷ்யா செல்லவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு சண்டைக் காட்சிகளை படமாக்க ப்ளான் போட்டுள்ளனராம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus