தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘மாஸ்டர்’ கடந்த ஜனவரி 13-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்திலும், கடந்த ஜனவரி 14-ஆம் தேதி ஹிந்தியிலும் (விஜய் தி மாஸ்டர்) ரிலீஸானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.
இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 65’யை நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைத்து வருகிறார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.
சமீபத்தில், இந்த படத்தின் முதல் ஷெடியூல் ஷூட்டிங் ஜார்ஜியாவில் முடிவடைந்தது. பின், கொரோனா நோயின் இரண்டாவது அலை தாக்கம் அதிகமானதால் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தப்பட்டது. நேற்று மாலை 6 மணிக்கு ‘விஜய் 65’ படத்துக்கு ‘பீஸ்ட்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதுடன், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் ரிலீஸ் செய்யப்பட்டது. தற்போது, இன்று (ஜூன் 22-ஆம் தேதி) விஜய்யின் பர்த்டே ஸ்பெஷலாக இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளனர். இப்போஸ்டர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது.
Wishing the #BEAST of Kollywood #ThalapathyVijay a very Happy Birthday!
Here is #BeastSecondLook!
#HBDThalapathyVijay #HappyBirthdayThalapathyVijay #HBDThalapathy@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja pic.twitter.com/E9RzGDpFwP— Sun Pictures (@sunpictures) June 21, 2021