யாஷின் ‘கே.ஜி.எஃப் 2’-வினால் விஜய்யின் ‘பீஸ்ட்’ படக்குழுவினர் எடுத்த அதிரடி முடிவு!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘மாஸ்டர்’ கடந்த ஆண்டு (2021) பொங்கல் ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடத்திலும் ரிலீஸானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். விஜய்யின் அடுத்த படமான ‘பீஸ்ட்’-ஐ நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைத்துள்ளார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இதில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

மேலும், முக்கிய ரோலில் இயக்குநர் செல்வராகவன் நடித்துள்ளார். படத்தை வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி இதன் ட்ரெய்லரை ரிலீஸ் செய்தனர். இந்த ட்ரெய்லரில் ஆக்ஷன் தூக்கலாக இருந்தது. ஆனால், நெல்சனின் வழக்கமான காமெடி வசனங்கள் இதில் இடம்பெறவில்லை.

தற்போது, இது தொடர்பாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘பீஸ்ட்’ ட்ரெய்லரில் நிறைய காமெடி வசனங்களை வைத்து முதலில் எடிட் செய்து விட்டார்களாம் படக்குழு. பின், யாஷின் ‘கே.ஜி.எஃப் 2’வின் ட்ரெய்லரை பார்க்கையில், அதில் ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இருந்ததால், ‘பீஸ்ட்’ ட்ரெய்லரிலும் ஆக்ஷன் காட்சிகளை அதிகம் வைத்து விட்டார்களாம். ‘கே.ஜி.எஃப் 2’ வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Share.