எம்ஜிஆருடன் விஜய்யை ஒப்பிட்டு போஸ்டர் அடித்த விஜய் ரசிகர்கள்!

  • September 9, 2020 / 06:25 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை திரையுலகில் கொண்டவராவார்.

தற்போது விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “மாஸ்டர்” படத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தின் வெளியீட்டுக்காக விஜய் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் அவ்வப்போது விஜய் குறித்த தகவல்களும் விஜய்யின் பழைய புகைப்படங்கள் வீடியோக்கள் போன்றவற்றை விஜய் ரசிகர்கள் இணையதளத்தில் வெளியிட்டு தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இதேபோல தற்போது கள்ளக்குறிச்சியில் உள்ள விஜய் ரசிகர்கள் முன்னாள் முதலமைச்சர் மற்றும் நடிகருமான எம்ஜிஆரின் போஸ்டர்களை விஜய் இருப்பது போல மார்ப் செய்து இருவரையும் ஒப்பிட்டு உயர்த்திப் பேசி போஸ்டர்களை வெளியிட்டு வருகிறார்கள்.

இதற்கு முன்னர் இதை மதுரை, சென்னை மற்றும் காஞ்சிபுரம் விஜய் ரசிகர்கள் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு எம்ஜிஆர் ரசிகர்கள் தொடங்கி அதிமுக அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அதை பற்றி சிறிதும் பொருட்படுத்தாமல் விஜய் ரசிகர்கள் இவ்வாறு செய்து வருகிறார்கள்.

இந்த போஸ்டர்களை வெளியிட்டு அவர்கள் எம்ஜிஆர் போல நீங்களும் மேலே வா தலைவா எங்களுக்கு அடுத்த முதல்வராய் வா தலைவா என்ற வாசகங்களை குறிப்பிட்டு வருகிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus