மாஸ்டர் வெளியீட்டு தேதியை போட்டு உடைத்த விஜய்யின் தந்தை!
October 30, 2020 / 09:23 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் மாஸ்டர்.
இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் இவர்களுடன் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா ஜெரெமையா,அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சேவியர் பிரிட்டோ இந்த படத்தை தயாரித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தில் வரும் “வாத்தி கம்மிங்” என்ற பாடல் யூடியூபில் மிகவும் பிரபலமடைந்தது.
இதை தொடர்ந்து விஜய் அடுத்து “விஜய் 65” என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து தனது கருத்துக்களை பகிரங்கமாக பகிர்ந்து கொண்ட விஜய்யின் தந்தை சந்திரசேகர் மீது ஏற்கனவே சங்கடத்தில் இருந்த விஜய்க்கு, மீண்டும் சங்கடம் தரும் விதமாக மாஸ்டர் திரைப்படம் கண்டிப்பாக பொங்கலுக்கு வெளியாகும் என்று பகிரங்கமாக வெளியிட்டு தேதியை அறிவித்துள்ளார் இவர். மிகவும் சர்ப்ரைசாக இந்த தேதியை அறிவிக்க வேண்டும் என்று வைத்திருந்த நடிகர் விஜய்க்கு இது ஏமாற்றமாக இருந்ததாக தகவல் வந்துள்ளது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.