கமல் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் 5’… வைல்ட் கார்ட் மூலம் என்ட்ரியாகப்போகும் ‘தளபதி’ விஜய்யின் நண்பர்!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5 கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இசை வாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா தேஷ்பாண்டே, அபிநய், பாவனி ரெட்டி, சின்னப்பொண்ணு, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, சுருதி, அக்ஷரா ரெட்டி, ஐக்கி பெர்ரி, தாமரைச்செல்வி, சிபி, நிரூப் ஆகிய 18 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி நமீதா மாரிமுத்து தவிர்க்க முடியாத சில காரணங்களால் வெளியேறி விட்டார். கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி நாடியா சங் எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த அக்டோபர் 24-ஆம் தேதி அபிஷேக் ராஜா எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி சின்னப்பொண்ணு எலிமினேட் செய்யப்பட்டார்.

கடந்த நவம்பர் 7-ஆம் தேதி சுருதி எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது, பிரபல நடிகர் சஞ்சீவ் இந்த ‘பிக் பாஸ்’ சீசன் 5-யில் வைல்ட் கார்ட் மூலம் நுழைய உள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளது. டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ், அவருடன் ‘பத்ரி, மாஸ்டர்’ போன்ற படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Share.