‘பிக் பாஸ்’ சீசன் 4… விஜய்யின் ‘ப்ரண்ட்ஸ்’ பட நடிகையும் ஒரு போட்டியாளராமே!

  • September 27, 2020 / 11:00 PM IST

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4-க்கான ஷூட்டிங் வெகு விரைவில் துவங்கவுள்ளது. சமீபத்தில், விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ‘பிக் பாஸ்’ சீசன் 4-க்கான இரண்டு ப்ரோமோ வீடியோக்களை வெளியிட்டது.

நடிகர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் இடம்பெற்றிருக்கும் இந்த இரண்டு ப்ரோமோ வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த ப்ரோமோ வீடியோக்களில் ‘பிக் பாஸ்’-யின் லோகோ டிசைன் புதிதாக டிசைன் செய்யப்பட்டிருந்தது. இந்த சீசன் 4-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். தினமும் பல பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட்ட வண்ணமுள்ளது கோலிவுட் வட்டாரம்.

இந்நிலையில், பிரபல நடிகை அனுராதாவின் மகள் அபிநயாஸ்ரீ ‘பிக் பாஸ் 4’-யில் கலந்து கொள்ளப்போகிறார் என்று தகவல் கிடைத்துள்ளது. விஜய்யின் ‘ப்ரண்ட்ஸ்’, பிரபுவின் ‘பந்தா பரம சிவம்’ போன்ற பல படங்களில் அபிநயாஸ்ரீ நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி வருகிற அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கும் என்று சொல்லப்படுகிறது. வெகு விரைவில் இந்த சீசன் 4-யில் கலந்து கொள்ளப்போகும் அந்த பிரபலங்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus