சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் சித்திக். இவர் பிரபல நடிகர் லாலுடன் இணைந்து இயக்கிய முதல் மலையாள படம் ‘ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்’. இப்படத்துக்கு பிறகு முன்னணி ஹீரோக்களை வைத்து சில மலையாள படங்களை இயக்கினார்.
சித்திக் தமிழில் விஜய்யின் ‘ப்ரண்ட்ஸ், காவலன்’, விஜயகாந்தின் ‘எங்கள் அண்ணா’, பிரசன்னாவின் ‘சாது மிரண்டா’, அரவிந்த் சாமியின் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர் மலையாளம், தமிழ் மொழி மட்டுமின்றி ஹிந்தியில் ஒரு படமும், தெலுங்கு மொழியில் ஒரு படமும் இயக்கியிருக்கிறார்.
கடைசியாக இயக்குநர் சித்திக் இயக்கிய மலையாள படமான ‘பிக் பிரதர்’ 2020-ஆம் ஆண்டு வெளியானது. தற்போது, இயக்குநர் சித்திக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கொச்சியில் உள்ள அம்ரிதா மருத்துவமனையில் ICU-வில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.