விஜய் – ‘ஜெயம்’ ரவி கலந்து கொண்ட ஃபங்க்ஷன்… தீயாய் பரவும் வீடியோ!

  • September 6, 2021 / 02:35 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரின் புதிய படமான ‘பீஸ்ட்’-ஐ நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்து வருகிறது. இதில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் இயக்குநர் செல்வராகவன் நடிக்கிறார். கடந்த ஜூன் 21-ஆம் தேதி விஜய்யின் பர்த்டே ஸ்பெஷலாக இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்ஸ் ரிலீஸ் செய்யப்பட்டது.

இப்போஸ்டர்ஸ் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. ‘பீஸ்ட்’-ஐ தொடர்ந்து விஜய்-யின் 66-வது படத்தை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ மற்றும் ‘PVP சினிமாஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளதாம். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக உள்ள இப்படத்தினை ‘தோழா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் வம்சி இயக்க உள்ளார்.

இப்படத்தின் தமிழ் வெர்ஷனுக்கு ‘ஜோக்கர்’ பட இயக்குநர் ராஜு முருகன் வசனம் எழுதுகிறார். இந்த படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இம்மாதம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று ஒரு ஃபங்க்ஷனில் நடிகர் விஜய் கலந்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. விஜய்யுடன் நடிகர்கள் ‘ஜெயம்’ ரவி, விக்ரம் பிரபு ஆகியோர் இருக்கும் ஸ்டில்ஸ் மற்றும் வீடியோஸ் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus