தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் 67-வது படமான ‘லியோ’வை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
இந்த படத்தை ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ நிறுவனம் சார்பில் லலித் குமார் அதிக பொருட்செலவில் தயாரிக்கிறார். இதில் விஜய்-க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜுன், கெளதம் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், சாண்டி ஆகியோர் நடிக்கின்றனர்.
இதற்கு அனிருத் இசையமைக்கிறார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார், பிலோமின் ராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
படம் வருகிற அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. விஜய்யின் பர்த்டே ஸ்பெஷலாக நேற்று வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ‘நா ரெடி’ பாடல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. தற்போது, விஜய் பாடியுள்ள ‘நா ரெடி’ பாடல் யூடியூபில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
Kondaadi Kolutharom di
10M #NaaReady lyric video ▶️ https://t.co/1o1j683YH2#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @anirudhofficial @Jagadishbliss @trishtrashers @duttsanjay @akarjunofficial @immasterdinesh @VishnuEdavan1 @AsalKolaar @SonyMusicSouth #LEO… pic.twitter.com/AzcrlgnVYj
— Seven Screen Studio (@7screenstudio) June 23, 2023