விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் ‘லியோ’… வெளியானது சஞ்சய் தத் கேரக்டர் GLIMPSE!

  • July 29, 2023 / 04:26 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் 67-வது படமான ‘லியோ’வை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

இந்த படத்தை ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ நிறுவனம் சார்பில் லலித் குமார் அதிக பொருட்செலவில் தயாரிக்கிறார். இதில் விஜய்-க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜுன், கெளதம் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், சாண்டி ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கு அனிருத் இசையமைக்கிறார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார், பிலோமின் ராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். சமீபத்தில், விஜய்யின் பர்த்டே ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ‘நா ரெடி’ பாடல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது.

இதன் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடிகர் சஞ்சய் தத்தின் பர்த்டே ஸ்பெஷலாக அவரின் கேரக்டர் (ஆண்டனி தாஸ்) GLIMPSE-ஐ ரிலீஸ் செய்துள்ளனர். படம் வருகிற அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

LEO - Glimpse of Antony Das | Thalapathy Vijay | Lokesh Kanagaraj | Anirudh Ravichander

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus