விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் ‘லியோ’… ட்ரெய்லர் எப்போது ரிலீஸ் தெரியுமா?
October 2, 2023 / 06:00 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் 67-வது படமான ‘லியோ’வை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
இந்த படத்தை ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ நிறுவனம் சார்பில் லலித் குமார் அதிக பொருட்செலவில் தயாரிக்கிறார். இதில் விஜய்-க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜுன், கெளதம் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், சாண்டி ஆகியோர் நடித்துள்ளனர்.
இதற்கு அனிருத் இசையமைக்கிறார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார், பிலோமின் ராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட போஸ்டர்ஸ், சஞ்சய் தத் – அர்ஜுன் கேரக்டர்களின் GLIMPSE மற்றும் 2 பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது.
இதன் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படத்தை வருகிற அக்டோபர் 19-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் ட்ரெய்லரை அக்டோபர் 5-ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
Your order is being prepared #LeoTrailer is on its way! Get ready to enjoy your meal